“வருத்தப்படாத வாலிபர் சங்கம்” இரண்டாம் பாகம் குறித்து முதல் முறையாக பதிவு ஒன்றை போட்ட இயக்குனர்.! என்ன கூறியுள்ளார் பாருங்கள்.

varuthapadatha-valibar-sangam
varuthapadatha-valibar-sangam

சினிமா உலகில் ஒரு ஹீரோ முதலில் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவிரைவிலேயே கவர்ந்து இழுக்க காமெடி கலந்த படங்களை கொடுத்தாலே போதும் அது அவருக்கு பெயரையும் புகழையும் உடனே பெற்றுத் தரவும் ஆனால் அதிலிருந்து படிப்படியாக ஆக்சன் மற்றும் காதல் படங்களில் இறங்கினால் மட்டுமே தனது பெயரை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

அதை சரியாக செய்து வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கலந்த படங்களில் நடித்து பின் ஆக்சன், காதல் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார் சிவகார்த்திகேயன் தற்போது கூட இவரது நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக இருப்பதால் மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலை மோதுகின்றன.

இத்திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை இன்னும் அதிகரித்துள்ளது சிவகார்த்திகேயன் அடுத்த படத்தையும் நெல்சன் திலிப்குமார் இயக்குவதாக தகவல்கள் கசிகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் காம்பினேஷனில் வெளிவந்து ரசிகர்களை சிரிக்க வைத்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த படத்தை பொன்ராம் என்பவர் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன்னுக்கும் கேரியரில் ஒரு பெஸ்ட் படமாக அமைந்தது. ரசிகர்கள் இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகுமா என கேள்வி எழுப்பி கொண்டே வந்த நிலையில் தற்போது அதற்கு பதிலளித்து உள்ளார் இயக்குனர் பொன்ராம். அவர் போட்ட ஒரு புதிய பதிவு  வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 பாகம் உருவாவது உறுதி.

நடிகர் சிவகார்த்திகேயன் சார் தான் Maturity ஆகிவிட்டார் ஆகையால் இளம் கதாநாயகர்களை வைத்து தான் இந்த படத்தை எடுக்க முடியும் என தெரிவித்தார் மேலும் காமெடி நடிகர் சூரி கதாபாத்திரத்திலும் வேறு ஒருவரை நடிக்க வைப்பதாக கூறப்படுகிறது ஆகமொத்தத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகம் உருவாகுவது ரெடி என அவர் கூறியுள்ளது. இச்செய்தி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது.