“பீஸ்ட்” படத்தில் தளபதி விஜயை மிரட்ட முதல் ஆளாக களத்தில் குதித்த இயக்குனர்.! படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்.

beast
beast

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் அதுவும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருவதால் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

இதன் காரணமாக தற்போது உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் விஜயை வைத்து திரைப்படங்களை தயாரிப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இவர் தனது 65வது திரைப்படமான பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை நெல்சன் திலிப்லிப்குமர் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் இவர் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் யோகிபாபு, டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ் உள்ளிட்ட இன்னும் பலர் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தினை பற்றிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தில் யார் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் செல்வராகவன் மற்றும் விஜய் ஆகியவர்களின் ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளித்ததோடு மட்டுமல்லாமல் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே செல்வராகவன் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணி காயிதம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.