தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக உரு மாரி இருப்பவர் நடிகர் விஷால் இவர் ஆரம்பத்தில் சிறப்பான ஆக்சன் காட்சிகள் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இப்படி சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்த இவர் படிப்படியாக முன்னேறி கொண்டே சென்றதால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குவிந்தன.
கொஞ்சம் பில்டப்பை அதிகமாக ஏத்தி வேற லெவலுக்கு கான்பிடேன்ட் உருவாக்கிக் கொண்டார். அதுவே அவருக்கு பிரச்சினையை கொடுக்க ஆரம்பித்தது ஏனென்றால் வந்த பட வாய்ப்புகள் எல்லாத்திலும் நடிக்க ஆரம்பித்தார் இதனால் அவர் சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்காததால் ஒரு கட்டத்தில் இவரது அனைத்து படங்களுமே மிகப்பெரிய வசூலை ஈட்ட அமல் போனது .
மேலும் ஒரு சில படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனால் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். மேலும் சினிமாவில் தற்போது ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். விஷால் ஆர்யாவுடன் இணைந்து இனிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த படத்தை முடித்த கையோடு அடுத்ததாக வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து வருகிறார். வெற்றியை பிடித்து விட்டால் அடுத்த அடுத்த வெற்றியை கொடுக்க முடியும் என விஷால் நம்பியிருக்கிறார் .அதிலும் குறிப்பாக தனது 32வது திரைப்படத்தில் தீவிரமாக நடித்துவருகிறார் விஷால் இந்த திரைப் படத்தில் அவருடன் இணைந்து ஹீரோயினாக சுனைனா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்குகிறார். மேலும் விஷாலின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ராணா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட் செலவில் தயாரித்து வருகின்றனர் இந்த திரைப்படத்திற்கு லத்தி சார்ஜ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது .
அதை வெளிப்படுத்தும் விதமாக பர்ஸ்ட் லுக் போஸ்டரையே டீசர் போன்று வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறதாம் அந்த வகையில் தமிழகத்தில் இந்தி, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது.