தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கருதப்படுபவர் நடிகர் வடிவேலு இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் இவர் எந்த அளவிற்கு படத்தில் காமெடியனாக இருக்கிறாரோ அதைவிட நிஜ வாழ்க்கையில் ஒரு வில்லத்தனமாக நடந்து கொள்வாராம்.
அந்த வகையில் இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது சில பிரச்சனையின் காரணமாக இவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு சினிமாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து நடிகர் வடிவேலு தற்போது முழுவீச்சில் ரீ என்றி கொடுத்து நடித்து வருகிறார்.
இவர் ரீ என்றி கொடுத்த முதல் படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்று இருந்தது. முதல் படமே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார் நடிகர் வடிவேலு அதில் ஒன்றுதான் சந்திரமுகி 2.
இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் வடிவேலு மறுபடியும் தனது வேலையை காட்டி வருகிறாராம். அதாவது நடிகர் வடிவேல் அவர்கள் சினிமாவில் நீண்ட ஆண்டுகளாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் வந்த நிலையில் இனிமேலாவது அவர் நன்றாக நடந்து கொள்வார் என்று பலரும் எண்ணி இருந்தார்கள்.
ஆனால் மறுபடியும் வேதாளம் முருங்கை ஏறியது போல தன்னுடைய வேலையை காட்டி இருக்கிறார். அதாவது நடிகர் வடிவேலு அவர்கள் சந்திரமுகி 2 சூட்டிங் ஸ்பாட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறாராம். அந்த வகையில் வடிவேலு அவர்கள் யாராவது எதையாவது சொன்னால் அதை கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்க மாட்டாராம் அது மட்டுமல்லாமல் ஒரு சிறிய விஷயத்திற்கு கூட அவர் அட்ஜஸ்மென்ட் செய்து கொள்ள மாட்டேங்கிறார் என்று கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் மிகவும் திமிராக நடந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது..
அது மட்டுமல்லாமல் சந்திரமுகி 2 படப்பிடிப்பில் அவருடைய பயங்கர சேட்டையால் கடுப்பான பி வாசு அவர்கள் வடிவேலுவை வெளியே போக சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார் இதைக் கேட்ட வடிவேலு, அங்கு இருந்தவர்களிடம் இயக்குனர் என்னை அவமானப்படுத்திட்டார் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் வடிவேலுவை பற்றி ஏற்கனவே தெரிந்தவர்கள் அதை எதுவுமே பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டார்களாம். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெசும்போருளாக மாறியது.