தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது. மேலும் இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை கண்டு வருவதால் இவரை தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என அழைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இவருடைய படத்தில் டான்ஸ், ரொமான்ஸ், சண்டை, நகைச்சுவை என அனைத்தும் கலந்து இருப்பதனால் குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற படங்களாக இருந்து வருகிறது. தற்பொழுது வரையிலும் இவருடைய திரைப்படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் முக்கியமாக இருந்து வருகிறது ரசிகர்களும் இவருடைய ரொமான்ஸ் காட்சிகளை ரசித்து வருகின்றனர்.
அப்படி வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஒன்றில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு நடிப்பு சரியாக வரவில்லை என இயக்குனர் இவரை வெறுத்துள்ளார். மேலும் அந்த நடிகைக்கு நடிப்பு சரியாக வரவில்லை என தயாரிப்பாளரிடம் கூறி வேறு ஹீரோயினை போடுங்கள் என கோரிக்கையும் வைத்தாராம். ஆனால் அந்த தயாரிப்பாளர் இந்த கதை படி அவர் நடித்தால் மட்டும் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அந்த நடிகையையே நடிக்க வைத்தாராம்.
எனவே தயாரிப்பாளர் கூறியது போலவே அந்த படமும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதன் பிறகு அந்த நடிகை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி உள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகை ஷாலினி தான் இவர் நடிகர் விஜய் உடன் இணைந்து காதலுக்கு மரியாதை படத்தில் நடித்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகி இருந்த நிலையில் 1997ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றினை கண்டது.
இந்தப் படத்தினை பாசில் இயக்கியிருந்த நிலையில் ஷாலினி நடித்த முதல் காட்சியை பார்த்துவிட்டு பாசில் இவருக்கு நடிப்பு வரவில்லை என கூற பிறகு அவரை வேண்டாம் எனவும் தயாரிப்பாளர் சங்கிலி முருகனிடம் கூறி நிலையில் இதனை சங்கிலி முருகன் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஷாலினி சொன்னபடியே விஜயுடன் நடித்து கெமிஸ்ட்ரியில் பின்னி படலெடுத்திருந்தார்.