வெந்து தணிந்தது காடு படத்தில் கமலுக்கு ஒரு போஷனை ஒதுக்கிய இயக்குனர்..! மிஸ் ஆனது எப்படி..?

kamal
kamal

காதல் மற்றும் ரொமாண்டிக் படங்களை எடுப்பதில் ரொம்பவும் கை தேர்ந்தவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.. அந்த வகையில் நடிகர் சிம்பு வைத்து இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களை கொடுத்த நிலையில் அண்மையில் மீண்டும் சிம்புவுடன் கைகோர்த்து..

இவர் உருவாக்கிய திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கிளாஸ்ஸான படமாக உருவானது இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிம்புவும் சூப்பராக உடல் எடையை எல்லாம் குறைத்து நடித்து அசத்தினார். இவருடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், siddhi idnani, kayadu lohar, neeraj madhav.

மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்கள்.  இந்த படம்  வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இதுவரை ஓரளவு நல்ல வசூலை அள்ளி உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து வெகு விரைவிலேயே..

இந்த படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகும் என சொல்லப்படுகிறது. இது இப்படி இருக்க வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து ஒரு சூப்பர் தகவல் கிடைத்துள்ளது. அதாவது வெந்து தணிந்தது   காடு படத்தின் ட்ரைலரில் கௌதம் மேனனின் வாய்ஸ் ஓவரில்  வெளியானது ஆனால் உண்மையில் நடிகர் கமல் தான் அந்த வாய்ஸ் பண்ண வேண்டியதாம்.

ஆனால் அப்போது நடிகர் கமல் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வந்த பொன்னியின் செல்வன் படத்தில் வாய்ஸ் ஓவரில் பிஸியாக இருந்ததால் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என கருதி கௌதம் மேனனே அதை பேசியதாக  கூறினார். கமல் பண்ணி இருந்தால் நிச்சயம் அது இந்த படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்திருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.