90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன் இவர் தற்போது உள்ள முன்னணி நடிகர்களுடன் 90களில் நடித்த முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். தொறந்து நடிகை சிம்ரன் சில வருடங்களாக சினிமாவில் தலை காட்டி வந்த நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக என்ரீ கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தான் நடித்து வரும் படத்தின் சூப்பர் அப்டேட்டையும் தெரிவித்துள்ளார் அது மட்டுமல்லாமல் இது குறித்து வெளியான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பிரசாந்த் நடித்து வரும் திரைப்படம் அந்தகன் இந்த படத்தின் மூலம் பல வருடங்களுக்குப் பின்னர் பிரசாந்துடன் சிம்ரன் இணைய உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாகவும் கூறபடுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று பிரம்மாண்டமாக உருவாக்கி உலகாகவும் இதற்காக ஐம்பதிற்கும் மேற்பட்ட டான்ஸ் கலைஞர்களை இந்த படத்தில் களம் இறக்கி உள்ளதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் நிறைவடைந்த சிம்ரன் தனது சமூக வலைதள பக்கத்தில் அந்தகன் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்டதாகவும் இந்த திரைப்படத்தை திரையில் பார்க்க எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் அந்தகன் படத்தின் போஸ்டர்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பல வருடங்கள் கழித்து நடிகை சிம்ரன் கதாநாயகியாக நடிக்க உள்ளதால் அவருக்கு வாழ்த்துகளும் குவிந்து கொண்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.