தளபதி விஜய் தமிழ் சினிமாவில் காதல் ஆக்ஷன் சென்டிமென்ட் போன்ற பல படங்களை கொடுத்து எண்ணற்ற ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டவர். இவரது படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ஃபேவரட் படங்களாக இருந்து வருகின்றன. அந்த வகையில் கடைசியாக விஜயின் மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்களை தொடர்ந்து தற்போது முதல் முறையாக இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஒரு திரைப்படம் குறித்த தகவல் ஒன்று தற்போது இணையதள பக்கத்தில் வெளிவந்துள்ளது. ஆம் 2003 ஆம் ஆண்டு விஜய் ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ரமணன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் திருமலை.
படத்தில் விஜய் செம மாஸான லுக்கில் நடித்திருந்தார். இந்த படத்தில் முதலில் ஹீரோயினாக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும் மற்றும் நடிகையுமான நம்ரிதா தான் நடிக்க இருந்தாராம். இவரை வைத்து திருமலை படத்தில் மூன்று நாட்கள் சூட் எடுத்துள்ளனர். பின்பு இயக்குனர் அந்த காட்சியை பார்த்த போது அவருக்கு திருப்தி இல்லை.
அதனால் ஹீரோயினை மாற்றி விடலாம் என்று நினைத்து ஹீரோயின் உடன் பேசி சம்மதம் வாங்கி பின்பு அந்த ஹீரோயினை கழட்டி விட்டு ஜோதிகாவை கமிட் செய்தார். இந்த செய்தியை இயக்குனர் முதலில் விஜய்யிடம் கூறாமல் அவரது அப்பாவிடம் கூறியுள்ளார். மறுநாள் ஷூட்டிங்கில் அதே காட்சியை திரும்பி எடுக்க, விஜய் ஏன் எனக் கேட்க..
ஹீரோயினை மாத்தி விட்டோம் என இயக்குனர் கூறியதும் செம கடுப்பாகி சென்றுவிட்டாராம் விஜய். பின்பு ஒரு மணி நேரம் கழித்து வந்து இயக்குனரிடம் எதுவும் பேசாமல் அந்த ஷாட்டை எடுத்துக் கொடுத்துள்ளார் அதன் பிறகு இயக்குனரை அழைத்து என்கிட்ட முதலிலே சொல்லியிருக்க வேண்டும் தானே என கூறியுள்ளாராம்.