தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும்பல புதுமுக இயக்குனர்கள் காலடி எடுத்து வைக்கின்றனர். அந்த வகையில் திரிஷா இல்லனா நயன்தாரா, சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன்ஆகிய திரைப்படத்தை எடுத்து மக்கள் மத்தியில் கவனிக்கப்பட்ட அவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
அதை தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான படங்களை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் இருந்து மாறுபட்டு முக்கிய கதாபாத்திரங்களில் சினிமாவில் நடிக்கவும் தொடங்கினார் அந்த வகையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
அஜித்துடன் சினிமாவும் தாண்டி மற்ற விஷயங்களையும் இவர் பகிர்ந்துகொண்டார் அப்பொழுது ரவிச்சந்திரனுக்கு சிலவற்றை எடுத்துக் கூறி அவரை முற்றிலுமாக மாற்றி உள்ளார் அஜீத்தை சந்தித்தன் பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டு சிறப்பான கதைகளை எழுதி வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபுதேவாவை வைத்துப் பஹீரா என்ற படத்தை எடுத்துள்ளார்/
இந்த திரைப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக 7 நாயகிகள் நடித்துள்ளனர். இந்த நிலையில் பஹீரா திரைப்படம் எப்படி உருவானது என்பது குறித்து பேசியுள்ளார். பஹீரா படத்தின் கதையை நான் முதலில் பிரபுதேவாவிடம் சொல்லும்போதே தயங்கிக் கொண்டு தான் இருந்தேன்.
ஆனால் அவருக்கு கதை பிடித்து விட்டது என கூறிய கேட்டுக்கொண்டார். அதன் பிறகுதான் நான் படத்தை எடுக்கவே துணிச்சலாக இருந்தேன் என கூறினார். அதிலும் இந்த படத்தின் கடைசி ஏழு நாள் ஷூட்டிங் என்னால் மறக்கவே முடியாது என கூறினார் ஆதிக் ரவிச்சந்திரன்