சிம்பு படம் என்றாலே எப்பொழுதும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பின் கடைசி நேரத்தில் அந்த பிரச்சினைகளிலிருந்து வெளியாகி திரையரங்கில் படம் வரும்.அந்த படங்கள் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடிப்பது வழக்கமாக வைத்துள்ளது அந்த வகையில் அண்மையில் கூட வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் பல்வேறு தடைகளை தாண்டி வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் மாநாடு.
இந்தப் படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாநாடு படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும் இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த காரணத்தினால் தான் இந்த படம் இன்னும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப்பை பெற்று ஓடிக்கொண்டு இருந்தது.
அதிலும் குறிப்பாக நடிகர் சிம்பு எஸ். ஜே சூர்யா, ஒய் ஜி மகேந்திரன் ஆகிய மூவரும் வரும் காட்சிகள் பிரமாதம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிப்பு வேற லெவல். எஸ் ஜே சூர்யா மாநாடு திரைப்படத்தில் வந்தான் சுட்டான் போனான் ரிப்பீட்டு இந்த டயலாக் தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.
ரசிகர்களையும் தாண்டி இந்த வசனம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது மதுரையைச் சேர்ந்த பிரியாணி உரிமையாளர் ஒருவர் இந்தப் படத்தின் வசனத்தை சற்று மாறுதல் செய்து விளம்பரம் செய்துள்ளார் அதில் அவர் கூறியது : வந்தாங்க சாப்பிட்டாங்க போனாங்க ரிபீட்டு..
வந்தாங்க சாப்பிட்டாங்க போனாங்க ரிப்பீட் என்ற வாசகம் பொருந்திய ஒரு போஸ்டரை ஓட்டி தற்போது பிரபல படுத்தியுள்ளனர் இதை எஸ் ஜே சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.இதோ அந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்.