Leo vs Jailer: விஜய்யின் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முன் பதிவு 50 நாட்களுக்கு முன்பாகவே வெளிநாடுகளில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இதன் மூலம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க முடியும் என்பதற்காகவே இப்படி ஒரு முடிவை படக்குழு எடுத்துள்ளதாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படி சமீபத்தில் அர்ஜுனனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய கேரக்டருக்கான கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட சோசியல் மீடியாவில் கலைக் கட்டியது.
இந்நிலையில் லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. எனவே விஜய்யின் ரசிகர்கள் லியோ படத்திற்காக காத்து வரும் நிலையில் தற்போது வெளியாகுவதற்கு 50 நாட்கள் இருக்கிறது இந்நிலையில் அயல்நாடுகளில் இப்படத்திற்கான முன்பதிவு துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக படம் வெளியாகுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் புக்கிங் தூங்குவார்கள் ஆனால் முதன்முறையாக 50 நாட்களுக்கு முன்பே வெளிநாடுகளில் லியோ படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. எனவே அதற்கான காரணம் குறித்தும் சிலர் சோசியல் மீடியாவில் பேசி வருகின்றனர். அதாவது, சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
வெளிநாடுகள், இந்தியா முழுவதும் வசூலை குவித்த நிலையில் இதற்காக லியோ படக் குழுவும் வெளிநாடுகளின் வசூலை குறி வைத்துள்ளது. இதன் காரணமாக தான் 50 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் சாதனையை ஓவர் டேக் செய்து ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.