இளம் வயதிலேயே சிறப்பான விருதுப்பெற்ற நடிகை ரோஜாவின் மகள்.! வாழ்த்துக் கூறும் பிரபலங்கள்..

roja-1

90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா. இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் ஒட்டு மொத்த தமிழ் இளைஞர்களின் கனவு கனியாக மாறினார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக கலக்கி வந்தார்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு இவருக்கு அரசியலில் அதிக ஆர்வம் இருந்ததால் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் களமிறங்கினார். அந்த வகையில் தற்பொழுது இவர் ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவரின் மகளுக்கு இளம் வயதிலேயே சிறப்பான விருது ஒன்று கிடைத்துள்ளதால் இவருக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தின் அமைச்சரான ரோஜாவின் மகள் அன்ஷீ மாலிகா ஏற்கனவே இவரைப் பற்றிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது மேலும் இவர் தனது இளம் வயதிலேயே தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் வெப் டெவலப்பர் மற்றும் கண்டன்ட் ரைட்டர் திறமை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது சிறந்த எழுத்தாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அன்ஷீ மாலிகா எழுதிய “தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்” என்ற புத்தகம் “ஜி டவுன்” என்ற இதழில் வெளியானதை அடுத்து தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளரான விருது இவருக்கு கிடைத்துள்ளது. அமைச்சர் ரோஜாவின் மகளுக்கு இந்த அரிய விருது இளம் வயதிலேயே கிடைத்துள்ளதை அடுத்து அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

anshumalikarojaselvamani
anshumalikarojaselvamani

சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் பிரபல பாலிவுட் நடிகை சஜன் இந்த விருதை ரோஜாவின் மகள் அன்ஷீ மாலிக்கு வழங்கிவுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியிட ரோஜா பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.