ஒரு காலகட்டத்தில் சினிமாவிற்கு மிக முக்கியமானதாக இருந்தது காமெடி ஒவ்வொரு திரியாப்டதிலும் காமெடி நல்லா இருந்தால் அந்த படம் வெற்றி பெறும் என ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தார்கள் அந்த வகையில் பல காமெடி நடிகர்கள் சினிமாவில் கொடிகட்டி பறந்தார்கள். கவுண்டமணி செந்தில் காமெடியை இன்று இருக்கும் ரசிகர்கள் கூட ரசித்து பார்ப்பார்கள் அந்த அளவு அவர்களின் காமெடி மிகவும் பிரபலம்.
ஒருசில காமெடியன்கள் வசனம் பேசி சிரிக்க வைப்பார்கள் ஆனால் ஒரு சில காமெடியன்கள் தங்களுடைய பாடி லாங்குவேஜ் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள். அந்த வகையில் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் வசனத்தால் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் எம்எஸ் பாஸ்கர். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.
இவரின் மகன் ஆதித்யா பாஸ்கர் இவர் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய 96 திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் இளம்வயது விஜய்சேதுபதி யாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அதேபோல் எம்எஸ் பாஸ்கரின் மகள் தமிழ் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவர் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியாகிய என்ஜிகே திரைப்படத்தில் ரகுல் பிரீத் சிங் அவர்களுக்கு டப்பிங் பேசினார் அதுமட்டுமில்லாமல் ஷியாம் ராய் படத்தில் சாய் பல்லவி அவர்களுக்கும் டப்பிங் பேசினார் அதுமட்டுமில்லாமல் சுல்தான் திரைப்படத்தில் ராஷ்மிகா அவர்களுக்கும் லிப்ட் திரைப்படத்தில் அமிர்தா ஐயர் அவர்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார் அது மட்டுமில்லாமல் இன்னும் பல திரைப்படங்கலில் முக்கிய நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
இந்தநிலையில் எம்எஸ் பாஸ்கரின் மகள் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.