ரசிகர்களால் “லியோ” படத்துக்கு வந்த புது பிரச்சனை.? உச்சகட்ட கோபத்தில் தளபதி விஜய்

vijay
vijay

தளபதி விஜய் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைகின்றன அந்த வகையில் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் விஜய் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் இந்த படத்தை சேவென் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார் அனிருத் இசையமைக்கிறார்.

லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிக்பாஸ் ஜனனி, பிரியா ஆனந்த், த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.  படத்தின் முதல் கட்ட சூட்டிங் சென்னையில் முடிந்ததை தொடர்ந்து 180 பேர் கொண்ட குழு காஷ்மீர் பறந்தது அங்கு இரண்டு மாதங்கள் படப்பிடிப்பை விறுவிறுப்பாக எடுத்து முடித்து அண்மையில் தான் சென்னை திரும்பியது.

மூன்றாவது கட்ட சூட்டிங் சென்னையில் நடக்கும் என பழக்குழு ஏற்கனவே அறிவித்தது அதன்படி சைலண்டாக சென்னையில் உள்ள பிரசாந்த் ஸ்டூடியோவில் படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது இதை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் அலைகடலென அந்த இடத்திற்கு சுற்றி வந்தனர். மேலும் செக்யூரிட்டியையும் தாண்டி ரசிகர்கள் உள்ளே வர பார்த்தனர்.

மேலும் கத்திக்கொண்டே கூச்சலிட்டதால் படப்பிடிப்பு சரியாக நடத்தவே முடியவில்லை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ரசிகர்களால் தற்பொழுது விஜய் ரொம்ப அப்செட்டில் இருக்கிறாராம்.. இது போன்று சென்னையில் எங்கு நடத்தினாலும் ரசிகர்கள்  வருவார்கள் என்பதால் படக்குழு படத்தை ஹைதராபாத்தில் நடத்தலாமா என ஆலோசித்து வருகிறதாம்..

ரசிகர்களின் தொல்லையால் மூன்றாவது கட்ட சூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டு இருப்பது விஜய்க்கு பெரும் கோபத்தை கொடுத்திருக்கிறாராம்.. இப்படியே போனால் படத்தின் பட்ஜெட் அதிகரிப்பதோடு படத்தின் தேதியும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.