லியோ படத்தின் ‘நான் ரெடிதான்’ பாடல் படப்பிடிப்பின் பொழுது அவமானப் படுத்தினாங்க.. நாங்களும் மனுஷங்க தானே.! கொட்டி தீர்த்த நடன கலைஞர்கள்

leo movie 2

Actor Vijay Leo Movie: லியோ படத்தின் முதல் பாடலான நான் ரெடி பாடல் படமாக்கப்பட்ட பொழுது நடந்த அவமானங்கள் குறித்து நடன கலைஞர்கள் சமீப பேட்டியில் கூறியிருப்பது அதிர்ச்சினை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக விஜய்யின் நடிப்பில் வெளியாகும் படத்தின் கதை சுமாராக இருந்தாலும் அதில் இருக்கும் பாடல்கள், விஜய்யின் நடனம் போன்றவை சூப்பர் ஹிட் பெறுவது வழக்கம்.

அப்படி லியோ படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பாடல் நான் ரெடிதான் வரவா. இப்பாடல் வெளியாகிய சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாக இருந்து வருகிறது. சிறியவர்கள் முதல் பிரபலங்கள் வரை ஏராளமானவர்கள் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள். தற்பொழுது விஜய்யின் லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதனால் படக் குழுவினர்கள் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் ட்ரெய்லர் வெளியாகி பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. அதாவது ட்ரெய்லரில் சில ஆபாசமான வார்த்தைகள் இடம் பெற்றிருந்ததால் இதனை நீக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்திருந்தார்கள். இவ்வாறு லியோ படத்தின் பிரச்சனைக்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக அமைந்தது நான் ரெடி பாடல் தான். அதாவது நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நான் ரெடிதான் வரவா பாடல் வெளியானது.

இப்பாடலில் சுமார் 1300க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடு இருந்தனர். ஆனால் அதில் சில நடன கலைஞர்களுக்கு ஒரு நாள் கூட சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. ஆனால் இது தவறான செய்தியாகும் என தமிழ்நாடு திரைப்படம் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்ட விட்டது, அதேபோன்று உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விட்டது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மௌனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்தார்.

leo movie 1
leo movie 1

இந்த சூழலில் நான் ரெடி தான் வரவா பாடலுக்கு நடனமாடிய நடன கலைஞர்கள் சிலர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்கள். நடனமாட 1500 பேரை அழைத்தார்கள் அதில் சங்கத்தின் உறுப்பினராக இருந்தவர்கள், உறுப்பினர் இல்லாதவர்கள் என அனைவரும் கலந்துக் கொண்டோம் படப்பிடிப்பின் போது எங்களைத் திட்டி அவமானப்படுத்தினார்கள்.

சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு டேபிள் போட்டு பிரியாணி பரிமாறினார்கள் உறுப்பினர் இல்லாத நாங்கள் வெட்டவெளியில் நின்று கொண்டு சாப்பிட்டோம் நாங்களும் மனுசங்கதானே. நான்கு மாதமா சம்பளம் தரவில்லை முதலில் நாங்கள் யூனியனில் தான் கேட்டோம். அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை லியோ படம் வெளியாவதற்குள் அனைவரும் சம்பளத்தை தர வேண்டும் என்று நடன கலைஞர்கள் பேட்டியில் தெரிவித்துள்ளனர்.