தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் உடலில் பல ஆபரேஷன்கள் செய்யப்பட்டாலும் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது
இதனை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லைக்கா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது 62வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலில் ஒன் லைன் கதை சொல்லும் பொழுது படக்குழுவினருக்கு பிடித்திருந்தது.
ஆனால் முழு ஸ்கிரிப்டயும் சொல்லும் பொழுது அது தயாரிப்பு நிறுவனத்திற்கும் சரி அஜித்திற்கும் சுத்தமாக பிடிக்காததால் அவரை படத்திலிருந்து விலக்கியது. உடனே வேறு இயக்குனரை தேடும் பணியில் இறங்கியது படகுழு இந்த நிலையில் தான் இயக்குனர் மகிழ் திருமேனியை படக்குழு கமிட் செய்து உள்ளது.
ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அஜித்திற்காக கதையை ரொம்ப மெனக்கட்டு எழுதி வருகிறாராம் இதனால் தான் இந்த படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனரை உறுதியாக அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்தில் மகிழ் திருமேனி வில்லனாக நடித்து வருவது..
ஏகே 62 படத்தின் கதை தாமதமாக மற்றொரு காரணம் என சொல்லப்படுகிறது எது எப்படியோ வெகு விரைவிலேயே இந்த கூட்டணி இணைந்து ஒரு பிரம்மாண்டமான படத்தை கொடுக்க இருக்கிறது என்பது மட்டும் உறுதி இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.