தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்க வரும் விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் ஒருசில திரைப்படங்களும் கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் விஜய் மற்றும் இவர்கள் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்த பீஸ்ட் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து விமர்சன ரீதியாக பெரும் தோல்வியடைந்துள்ளது. இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தது.
பீஸ்ட் திரைப்படத்திற்காக காத்து வந்த விஜய்யின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் நிலகிய நிலையில் தற்போது தனது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஹைதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இவ்வாறு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். ராஷ்மிகா மந்தனா முதலில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இவ்வாறு விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ள இந்த திரைப்படத்தினை வம்சி இயக்குகிறார். இவ்வாறு இந்த திரைப்படத்தினை பற்றிய பல அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.