தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்று. இந்த படத்தின் படபிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடத்தப்பட உள்ள நிலையில் தற்போது காஷ்மீரில் படபிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
லியோ திரைப்படத்திலிருந்து பல அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் முதலில் லோகேஷ் கனகராஜ் மற்றும் பட குழுவினர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியான நிலையில் காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக நடிகை திரிஷா அவர்கள் தனது நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் நடிக்கக்கூடிய ஒரு காட்சியை செல்போன் மூலம் வீடியோ எடுத்து அதை முகம் தெரியாத ஒரு நபர் இணையத்தில் வெளியிட்டு இருந்தார் இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் சில கண்டிஷன் போட்டதாக கூறப்பட்டிருந்தது.
இருப்பினும் படப்பிடிப்பு நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் லியோ திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, கௌதம் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தாத், அர்ஜுன், மிஷ்கின், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் அவர்கள் செய்த காரியம் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது அதுமட்டுமல்லாமல் இதனால் தான் அவர் தளபதியாக இருக்கிறார் என்றும் விஜய்யை பெருமையுடன் கூறி வருகிறார்கள். காஷ்மீரில் தற்போது குளிர் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் இரவு காட்சிகளை படக்குழு நீக்கி இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இதை அடுத்து ஒன்பது மணி அளவில் படத்தின் ஷூட்டிங் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படி கடுமையான குளூரிலும் தினந்தோறும் நடிகர் விஜய் அவர்கள் சூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரம் தவறாமல் 8.15 மணிக்கெல்லாம் அவர் வந்து விடுகிறாராம். இதை ஒரு நாட்கள் இரண்டு நாட்கள் மட்டுமல்லாமல் நாட்கள் முழுவதும் இதை தான் அவர் பின்பற்றுகிறார் என்று கூறப்படுகிறது. இதைப் பார்த்துதான் படக்குழுவினர் ஆச்சரியம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.