‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரைலர் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு.!

தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை நடைபெற்றது.

இதனை அடுத்து தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எனவே முதல் பாகத்தை விட மணிரத்தினம் இரண்டாவது பாகத்தில் பல மாற்றங்களை செய்து இருப்பார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்து வருகின்றனர்.

இவ்வாறு தற்பொழுது பட குழுவினர்கள் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் அவர்கள் கலந்துக் கொள்ள இருப்பதாக பட குழுவினார்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் இன்னும் ஏராளமான பிரபலங்கள் மற்றும் ரசிகர் பட்டாளங்களும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ள இருக்கும் நிலையில் ட்ரெய்லரின் ரிலிஸ்க்காக ரசிகர்கள் காத்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்து படக்குழு பிரபலங்களின் போஸ்டர்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி தேவனாக ஜெயம் ரவி நடித்திருக்கும் நிலையில் அவர் எப்படி அருண்மொழி தேவனாக மாறினார் என்பது குறித்த வீடியோ நேற்று வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் எப்படி உருவாகிறது என்ற ஃகிம்ப்ஸ் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.  இதோ அந்த வீடியோ..