தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் தளபதி என்ற கௌரவத்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் விஜய்க்கு இன்று 42-வது பிறந்த நா ள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த நாளை அவருடைய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானதைத் தொடர்ந்து இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதுவரை வெளிவந்த அந்த போஸ்டர் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி அவர்கள் இயக்குவது மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள்தான் தயாரிக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படமானது தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவது நடிகை ராஷ்மிகா மந்தனா ஆவார் இவர் ஏற்கனவே தெலுங்கில் கஸ்பா என்ற திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது மட்டுமில்லாமல் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார்.
இது ஒரு பக்கம் இருக்க இன்று தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்களும் நட்சத்திரங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் புது புது போஸ்டர்களை சமூக வலைதள பக்கத்தில் அவர்கள் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.