தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசன் அவருடைய நடிப்பில் இறுதியாக விக்ரம் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தினை சங்கர் இயக்கி வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படம் விரைவில் வெளியாக வேண்டும் என்பதற்காக குழுவினர்கள் பகல் இரவு என பார்க்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். மேலும் கமலஹாசனின் காட்சிகள் அதிகாலை நான்கு மணி வரை படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் சென்னையில் நடைபெற்ற அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இன்றுடன் படப்பிடிப்புகள் முடித்ததாகவும் இதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்புகளுக்காக பட குழுவினர்கள் தென்னாப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதற்கு முன்பு கமலஹாசன் அவர்கள் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படக்குழுவினர்கள் விரைவில் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விடும் என்றும் அதன் பிறகு தொழில்நுட்ப பணிகளை தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் கண்டிப்பாக திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் கமலஹாசன் அவர்களை தொடர்ந்து காஜல் அகர்வால் , சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ் குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகி வரும் நிலையில் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் திசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை தொடர்ந்து ரத்தினவேல் ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்கர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தினை லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இவ்வாறு மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.