நடிகர் விக்ரம் தற்பொழுது துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிவுள்ள இந்த நிலையில் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை கௌதம் மேனன் இயக்க மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ரீத்து வர்மா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் இவர்களைத் தொடர்ந்து பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது பிறகு 2018ஆம் ஆண்டு திரைக்கு வரும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்புகள் தள்ளிப்போனது.
இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விக்ரமும் அடுத்தடுத்து தனக்கு வாய்ப்பு கிடைத்த திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் கடைசியாக மிகவும் பிரம்மாண்டமாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு துருவ நட்சத்திர படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் அதனை அடுத்து தற்பொழுது படக்குழுவினர்கள் மூலம் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் “விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறதை போஸ்டர் மூலம் படகு குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பொதுவாக சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏனென்றால் விக்ரம் நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#John will meet you 🔜#Summer2023?#ChiyaanVikram @menongautham @Jharrisjayaraj #KondaduvomEntertainment @SonyMusicSouth #DhruvaNatchathiram pic.twitter.com/T1Gx9C1zjU
— Sreedhar Pillai (@sri50) February 7, 2023