சின்னத்திரையில் பிரபல ஜோடிகளான சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 சீரியலில் நடிகர் நடிகையாக அறிமுகமானவர். இந்த சீரியல் பல வருடங்கள் ஒளிபரப்பாகி ஹிட் ஆனதை தொடர்ந்து மக்களின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றாக இடம் பிடித்தது.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சிகளிலும் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. சிறந்த நடிகர் நடிகைகளாக இந்த சீரியலில் நடித்ததற்காக விருதுகளும் வாங்கியுள்ளனர். ராஜா ராணி தொடரில் ரீல் பேராக நடித்துவந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பித்தனர்.
இந்த சீரியல் முடிந்த பிறகு இருவரும் திருமணம் செய்து ஒரு மகளைப் பெற்று அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடத்தி வரும் யூடியுப் சேனலிலும் பல வீடியோக்களை வெளியிட்டு எண்ணற்ற ஃபலவர்ஸ்களை கொண்டுள்ளனர். ஒரிரு வருடங்கள் திருமண வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் செய்து அடுத்த கட்டமாக இருவரும் சீரியலில் நடிக்க தொடங்கிவிட்டனர்.
அப்படி நடிகர் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகராக நடித்து வருகிறார். ஆலியா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன்2 தொடரில் சித்து உடன் இணைந்து ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இவர் தற்போது இரண்டாவது முறையாக நிறைமாத கர்ப்பமாக உள்ளதால் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த ஜோடிகள் இருவரும் சம்பாதித்து பல சொகுசு கார்களை வாங்கி குவித்து வரும் நிலையில் சஞ்சீவ் ஆரம்பத்திலிருந்தே வைத்திருந்த Mercedes C class காரை அவரது அண்ணனுக்கு கிப்ட் ஆக கொடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவிலும் நடிகர் சஞ்சீவ் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.