Cooku with Comali : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் புகழ் இவர் நீண்ட கால தோழியான பென்சி என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் புகழின் மனைவிக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் சென்று இருந்தார்கள் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் சமீபத்தில் புகழுக்கு குழந்தையும் பிறந்தது.
அப்படி இருக்கும் நிலையில் சற்றுமுன் புகழ் தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறிய விஷயம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது இருமுறை தாய் வாசம் தெரிய வேண்டும் எனில் பெண் பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்.. என் மகள் அல்ல.. என் மகாராணி பிறந்திருக்கிறாள் என் மகளே. தாயும் சேயும் நலம் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் புகழுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதுக்கு வாழ்த்துக்கள் கூறி லைக் போட்டு வருகிறார்கள்.