நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் இதுவரை 168 திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு தற்போது வயதாகி இருந்தாலும் இன்றும் தமிழ் சினிமாவில் ஓரிரு வருடங்களுக்கு ஒரு படமாவது கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் கடைசியாக சிறுத்தை சிவா உடன் இணைந்து அண்ணாத்த என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க பல இயக்குனர்களுடன் ரஜினி கதை கேட்டு வந்தார். அப்பொழுதுதான் இளம் இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலிப் குமார் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்து அடுத்ததாக விஜயை வைத்து பீஸ்ட் எனும் படத்தை இயக்கி வந்தார்.
அப்போது ரஜினிக்கு இவர் ஒரு சிறப்பான கதையை கூற அந்தக் கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்துப் போக இருவரும் ரஜினியின் அடுத்த 169 வது திரைப்படத்தில் இணைவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தது. அதைத்தொடர்ந்து அந்தப் படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டு போஸ்டரும் வெளியாகியது. தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் கூட இந்த படத்திற்காக ஜெயில் போன்ற செட் அமைக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியது. இந்த படத்தை பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்ச்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது மற்றும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் உணவு தயாரிக்கும் காண்ட்ராக்டர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியின் எளிமை குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியது ரஜினிக்கு என்று நாங்கள் தனியாக எந்த உணவும் தயார் செய்ய மாட்டோம் படத்தில் வேலை செய்யும் 1200 பேருக்கு என்ன சாப்பாடு சமைக்கிறோமோ அதையேதான் ரஜினியும் சாப்பிடுவார் எனக் கூறினார். மேலும் சிலர் உப்பு அல்லது காரம் கம்மியாக சாப்பிடுவார்கள் அந்த ஒரு வித்தியாசம் மட்டும் தான் இருக்கும் மற்றபடி அனைவருக்கும் ஒரே உணவுதான் என கூறியுள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் மட்டுமல்ல எப்பொழுதுமே அவர் நடிக்கும் படங்களிலும் இதையே தான் கடைபிடிப்பாராம்.