விஜய் டிவி தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதில் ஒரு ஃபேமஸான நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மக்களின் கவனத்தை உடனடியாக திசை திருப்ப விடாமல் ஹாட்ஸ்டார் OTT தளம் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அந்த 14 போட்டியாளர்களும் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் விளையாடவர்கள் என்பதால் எடுத்த உடனேயே சண்டை, சச்சரவும் வீட்டில் வெடித்தது. இதனால் ஆரம்பத்திலேயே மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை நீங்கள் 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் கண்டுகளிக்க முடியும்.இதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமே.. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து பல முக்கிய போட்டியாளர்களில் வெளியேறி உள்ளனர். அந்த வகையில் வனிதா விஜயகுமார், சினேகன், தாடி பாலாஜி, சுஜா வருணி, அபிநய் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர்கள் வெளியேறி இருக்கின்றனர்.
வைல்ட் கார்ட் என்ட்ரியின் மூலம் சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் உள்ளே வந்து உள்ளார் அவரை தொடர்ந்து சதீஷ், ரம்யா பாண்டியன் ஆகியவர்களும் வந்துள்ளனர் தற்போது பலர் வெளியேறி நிலையில் மூன்று பேர் உள்ளே வந்து உள்ளது இன்னும் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி உள்ளது இப்படி இருந்தாலும் மறுபக்கம் வாரம் வாரம் நாமினேஷன் வைக்கப்பட்டு வருவதால் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வாரத்தில் நாமினேஷன் பட்டியலில் ஜூலி, அனிதா சம்பத், சுருதி, தாமரைச்செல்வி, நிரூப், சதீஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். காமெடி நடிகர் சதிஷ் மற்ற போட்டியாளர்களை காட்டிலும் மிகக் குறைந்த ஓட்டு வாங்கி உள்ளதால் இந்த வாரத்தில் அவர் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுக்கு அடுத்த இடத்தில் அனிதா சம்பத்தும் இருக்கிறார். இருப்பினும் யார் வெளியே வருவார் என்பது தெரியவில்லை.