பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் முதன் முறையாக ஓபன் நாமினேஷன் நடந்துள்ளது 6 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு பெண் போட்டியாளர்கள் ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் சிக்கி உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி கடந்த மாதம் 9ம் தேதி அன்று தொடங்கப்பட்ட நிலையில் தற்பொழுது 40 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஸினி ஆகியவரகள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஜிபி முத்து இரண்டாவது வார இறுதியில் தன்னுடைய மகனை பார்க்க வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இரண்டு போட்டியாளர்களை காரணத்துடன் நாமினேட் செய்ய வேண்டும்.
இந்நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேசன் நடைபெற்று இருக்கிறது வழக்கமாக மற்ற சீசன்களில் 50வது நாட்களுக்கு பிறகுதான் ஓபன் நாமினேஷன் நடந்துள்ளது ஆனால் இந்த முறை சீக்கிரமாகவே நாமினேஷன் நடக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாமினேஷனில் தனலட்சுமி, அசீம் மணிகண்டா ராஜேஷ், ராம், ராபர்ட், அமுதவாணன், கதிரவன் ஆகியோர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு தேர்வாண ஏழு பேரில் மணிகண்ட ராஜேஷ் தற்பொழுது முதன்முறையாக நாமினேஷனில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 6 வாரங்களாக நாமினேஷன் பட்டியலில் தப்பித்து வந்த மணிகண்டா இந்த முறை மாட்டி விட வேண்டும் என்பதற்காக அனைத்து போட்டியாளர்களும் பிளான் போட்டு இவரை தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.
இவ்வாறு இதன்படி தற்பொழுது வரையிலும் பதிவாகியுள்ள வாக்குகளின் அடிப்படையில் மணிகண்டாவுக்கு மட்டும் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளது இதனை பார்க்கும் பொழுது முதன்முறையாக நாமினேஷனில் சிக்கிய மணிகண்டா இந்த வாரம் பிக்பாசை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது மேலும் இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் ஆவார்.