விஜய் டிவியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது ஆறாவது சீசனை மக்கள் எதிர்நோக்கி இருந்த நிலையில் ஹாட்ஸ்டார் இல் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறது.
இதில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக விளையாண்ட பலர் இதில் விளையாண்டாண்டு வருவதால் எடுத்த உடனேயே பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் சண்டை சச்சரவும் அதிகமாக இருந்தது. ஒரு சிலர் பிரஷர் தாங்க முடியாமல் பாதியிலேயே ஓடி விட்டனர்.
மேலும் ஒரு சிலர் கோபத்தை கன்ட்ரோல் செய்ய முடியாமல் மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேறினர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிய இன்னும் கொஞ்ச நாட்களே இருப்பதால் பல்வேறு விதமான போட்டிகளை வைத்து போட்டியாளர்களை அலற விடுகின்றனர்.
அதில் ஒன்றாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு டாஸ்குகளும் கடினமாக இருந்தன அதைத் தொடர்ந்து தற்போது 15 லட்சத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றலாம் என ஒரு போட்டியை வைத்துள்ளது இதனையடுத்து அந்த 15 லட்சத்தை ஒரு வழியாக சுருதி தட்டி தூக்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து மக்களும் பிக் பாஸ் சீசன் 5 சுருதி சரியாக விளையாடவில்லை என்றாலும் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்து கொண்டு இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி தனது திறமையை காட்டி உள்ளார் இவர் அந்த 15 லட்சம் பணத்தை எடுத்தது நல்ல விஷயம் என கூறி பாராட்டி வருகின்றனர்.