ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளிவந்து இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த திரைப்படம் தன் சந்திரமுகி. இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இத்திரைப்படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து லேடி டி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,பிரபு, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் எப்பொழுது மீண்டும் உருவாகும் என்று மிகவும் ஆர்வமாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘சந்திரமுகி 2’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது தொடங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இத்திரைப்படத்தில் புதிதாக முக்கிய கேரக்டரில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறாராம். மேலும் பி.வாசு இத் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும்,மேலும் அதே சமயத்தில் சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் எந்த பாகத்திற்கும் கதை சம்பந்தம் இல்லாமல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் எம்எம் கீரவாணி என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் எம்எம் கீரவாணி ஏற்கனவே பாகுபலி, பாகுபலி-2 உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.
எனவே இந்த இசை மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இத்திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இவனைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.