கதிரவனை தொடர்ந்து 13 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்த போட்டியாளர்.! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

bigboss-6-
bigboss-6-

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதுமே வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் அந்த வகையில் குக் வித் கோமாளி பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் சீசன் சீசனாக நடை பெற்றுக் கொண்டு வருகிறது அதிலும் குறிப்பாக பிக் பாஸ் ஐந்து சீசன்கள் முடிந்து 6-வது சீசனும் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் ஜி பி முத்து மட்டும் சொந்த காரணங்களால் வெளியேற மற்றவர்கள் அனைவரும் வார வாரம் நடத்தப்படும் எலிமினேஷன் ரவுண்டில் ஒவ்வொருவராக வெளியேறினர். கடைசியாக ஏ டி கே குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறிய நிலையில் அடுத்து பிக் பாஸ் வீட்டில் ஷிவின், மைனா நந்தினி, விக்ரமன், அசீம், அமுதவாணன்..

மற்றும் கதிரவன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினுள் இருந்தனர். பிக் பாஸ் பணப்பெட்டியை உள்ளே அனுப்பினார் 3 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு கதிரவன் வெளியேறினார். அதே பணப்பெட்டியை வைத்து இன்னொரு போட்டியாளரை வெளியே அனுப்ப திட்டம் போட்டதும் பணப்பெட்டியில் 13 லட்சம் இருக்கும்பொழுது அமுதவாணன்.

திடீரென அந்த பணப்பெட்டியை தொட்டுவிட்டார் இதனால் அவர் தற்போது வெளியேறி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் அதிக ஓட்டுகளை வாங்கி வின்னர் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்ட நிலையில் திடீரென அவர் பணப்பெட்டியை எடுத்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

13 லட்சம் பணம் பெட்டி மற்றும் பிக் பாஸ் வீட்டில் அவர் இருந்ததற்காக சம்பாதித்த தொகை என அனைத்தும் வைத்து பார்த்தால் மிகப்பெரிய ஒரு தொகையை தற்போது வீட்டுக்கு அமுதவாணன் எடுத்துச் சென்றுள்ளார் என தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

amuthavanan
amuthavanan