சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் இடையில் உடல் எடை சற்று கூடி ஒருசில திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெறவில்லை.
இதனையடுத்து பின்பு சிம்பு ஜிம் ஒர்க்கவுட் எல்லாம் செய்து உடல் எடையை குறைத்து பிட்டாக மாறியுள்ளார். பின்பு ஈஸ்வரன் மாநாடு போன்ற திரைப்படங்களை கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியாகிய மாநாடு திரைப்படம் மக்களிடையே பெருமளவு வரவேற்பை பெற்று நல்ல வசூல் வேட்டையை நடத்தியது. அந்த வகையில் தற்போது சிம்புவுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
மேலும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சிம்புவை வைத்து படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதனையடுத்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு “பத்தல தல” “கொரோனா குமாரு” போன்ற சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது சிம்பு ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் சிம்பு வாலு படத்தில் நடித்து வரும் பொழுதே அவர் ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஒரு படம் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அப்பொழுது சிம்பு உடல் எடை ஏறி படத்தில் நடிக்க பெரிதும் ஆர்வம் இல்லாமல் இருந்ததை கவனித்த ஏஜிஎஸ் நிறுவனம் அப்போது சிம்புவை வைத்து படம் பண்ணவில்லை.
தற்போது சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் வேற லெவலில் இருந்ததால் இதனை பார்த்த ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது சிம்புவை வைத்து படம் தயாரிக்க ரெடியாக உள்ளனர். மேலும் ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் ஒரு கதையை சிம்புவிடம் கூறியுள்ளார் அந்த கதையும் சிம்புவிற்கு பிடித்துள்ளதாம். அதனால் கூடிய விரைவில் சிம்பு நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரு படம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகின.