ஆர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் என்றால் அது சார்பட்டா பரம்பரை திரைப்படம் தான் இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டது என கூறப்படுகிறது மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றுவிட்டது.
பொதுவாகவே ஆர்யா நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் ஆனால் இத்திரைப்படம் வெளியான பொழுது ஆர்யா மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆர்யா இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த அனைவரையும் நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறினார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியை மீம்ஸ் கிரியேட்டர்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பற்றி தற்போது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ஆம் அந்த தகவல் என்னவென்று கேட்டால் இந்த திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல கலைஞர் டிவி பெற்றுள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரத்தில் பலரும் இதனை தான் கூறுவதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு சில ரசிகர்கள் இந்த திரைப்படத்தை நாங்கள் தொலைக்காட்சியில் பார்க்க மிக ஆவலாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள் பல சினிமா பிரபலங்களும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா என கமெண்ட் பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.