‘தளபதி 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த நிறுவனம்.!

THALAPATHY-66-VIJAY
THALAPATHY-66-VIJAY

விஜய் நடிப்பில் உருவாகிவரும் “தளபதி 66″திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வரும் ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்த நாள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் ‘தளபதி 66’திரைப்படத்தின் அப்டேட் மற்றும் ‘தளபதி 67’ திரைப்படத்தின் அறிவிப்பு ஆகியவை வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ‘தளபதி 66’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிறியேசன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தளபதி 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21-ஆம் தேதி மாலை 6:01 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.

மேலும் இது குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்ட நிலையில் இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.  இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து சகோதரர்களாக ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த்,  தந்தையாக சரத்குமார் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.  மேலும் பிரபு,ஜெயசுதா,சங்கீதா,சம்யுக்தா, யோகிபாபு ஆகியோர் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்னணி நடிகர் நடிகைகளான நடிகர் விஜய்,  இவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா இவர் நடித்து வரும் இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகையாகவும்,  அனைவர்களுக்கும் வழிகாட்டியாகவும் திகழும் குஷ்புவும் இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இத்திரைப்படத்தினை திராஜ் தயாரிப்பில், மதன் இசையில், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. மேலும் இத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.