தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் விக்ரம் திரைப்படத்தை இயக்கியதன் பிறகாக தமிழ் திரையுலகமே கொண்டாடும் இயக்குனராக மாறிவிட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தமிழில் இதுவரை நான்கு திரைப்படங்கள் மட்டும் இயக்கியிருந்தாலும் இந்த நான்கு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இந்த வெற்றியை யாரும் தொட முடியாத அளவிற்கு சாதனை படைத்துள்ளார். அந்தவகையில் இவர் இயக்கிய நான்கு திரைப்படங்கள் என்னவென்றால் மாநகரம் ,கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் ஆகும்.
அந்தவகையில் இவர் இயக்கிய நான்கு திரைப்படங்களும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பலமுறை பார்த்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ஒரு கதையை ரசிகர்கள் எந்த வகையில் ரசிப்பார்கள் என்ற நுட்பத்தை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார்போல் தனது கதையை லோகேஷ் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி யை வைத்து அவருடைய அறுபத்து ஏழாவது திரைப்படத்தை இயக்க உள்ளார் மேலும் லோகேஷ் அவர்கள் ஏற்கனவே தளபதி விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் என்னுடைய இடத்திலிருந்து வேலையை பார்த்த உணர்வு இல்லை என்று லோகேஷ் கூறியது மட்டுமில்லாமல் விக்ரம்தான் என்னுடைய உலகம் போல் இருந்தது எனவும் கூறியுள்ளார்.
மாஸ்டர் துரை படத்தில் விஜய் உடன் வேலை பார்த்த பொழுது அவர் யார் என்று எனக்கு நன்றாக தெரிந்து விட்டது அதேபோல நான் எப்படிப்பட்டவர் என்பது விக்ரம் திரைப்படத்தின் மூலம் அவருக்கு தெரிந்திருக்கும். அந்த வகையில் மக்களிடம் ஒரு படத்தை எப்படி கொண்டு போய் சேர்க்க முடியும் என்ற நுணுக்கம் எனக்கு இருக்கிறது இந்நிலையில் விஜய்யை வைத்து அடுத்ததாக எடுக்கும் திரைப்படம் 100% வெற்றி காண முடியும் என லோகேஷ் கூறியுள்ளார்.