நடிகர் சிம்பு சினிமாவுலகில் நடிகர் என்ற அந்தஸ்தையும் தாண்டி பல்வேறு திறமைகளை வெளிக்காட்டி தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருகிறார் இவர் இயக்குனராகவும் பாடகராகவும் இசை அமைப்பாளராகவும் நடன கலைஞராக பணியாற்றிய சினிமா உலகில் வலம் வருகிறார்.
இதனால் அனைத்து மக்களுக்கும் பிடித்துக் கொண்ட நபராக நடிகர் சிம்பு இருக்கிறார். இருப்பினும் சமீபகாலமாக இவரது திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை மேலும் சில காலங்கள் படத்தில் நடிக்காமல் இருந்து உள்ளார் ஆனால் தற்போது மீண்டு நடிக்க வந்துள்ள நடிகர் சிம்பு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
முதலில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்தார் அதனைத் தொடர்ந்து மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது மாநாடு திரைப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது இந்த நிலையில் போஸ்ட் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார்.
அதில் வேட்டை மன்னன் படம் குறித்தும் அவர் பேசியிருந்தார் அதில் அவர் கூறியது வேட்டை மன்னன் திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக் படம் அந்த படம் அப்பொழுது வெளிவந்தால் சரியாக இருக்காது என்ற காரணத்தினால் அப்பொழுது நாங்கள் அதை நிறுத்தி விட்டோம் ஆனால் இந்த படத்தை அப்போது எடுக்கும் திறமை நெல்சன் திலிப்குமார் உடன் இருந்தது.
நெல்சன் திலிப்குமார் கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை கொடுத்து இருந்தார். அந்தப் படத்தில் வரும் டார்க் காமெடியை நான் பார்த்து ரசித்தேன் ஆனால் வேட்டை மன்னன் படத்தில் இதைவிட 90% டார்க் காமெடிகள் இருந்ததாக அவர் கூறினார்.