Jailer : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருந்தது. படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால்..
யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தமன்னா, சுனில் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் அதிக ஆக்சன் எமோஷனல் என இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியது. ஜெயிலர் படம் மொத்தமாக 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதால் சந்தோஷமடைந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்..
பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்.. வசூல் மன்னனாக கலக்கும் ரஜினி
ரஜினி, நெல்சன் திலிப்குமார், அனிருத் போன்றவர்களுக்கு ஒரு கோடி மதிப்பிலான சொகுசு கார் மற்றும் செக் போன்றவற்றை பரிசாக கொடுத்தார். இவர்களைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு தங்க நாணயத்தை கொடுத்தார். ஜெயிலர் படத்தை பலரும் கொண்டாடி வருகின்ற நிலையில் ரஜினியுடன் பல படங்களில் நடித்த ரமேஷ் கண்ணா ஜெயிலர் படத்தை விமர்சித்துள்ளார்.
அவர் சொன்னது என்னவென்றால்.. இப்பொழுது எல்லாம் நல்ல கதைய அம்சம் கொண்ட படங்களை பார்க்க முடிவதில்லை.. எல்லாம் வெட்டு, குத்து, ரத்தமாக இருக்கிறது. ஜெயிலர் படத்தை அரை மணி நேரத்திற்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை முதல் காட்சியில் என்ன இருக்கிறதோ அதுதான் கடைசி காட்சியிலும் இருக்கிறது.
ஆன் தி வே ல மகனை கொள்கிறார் ரஜினி இது தங்கப்பதக்கம் படத்துல சிவாஜி பன்னியதுதான் என பேசினார் சமீபகாலமாக ரசிகர்களும் ஆக்சன் கதைகளை அதிகம் ரசிக்க துவங்கி விட்டனர் அதற்கு லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய காரணமாக சொல்லலாம் அவர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருந்தது எனக்கூறி உள்ளார்.