பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் விஜய் தொலைக்காட்சியை காப்பியடித்து குக்கிங் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டம் என்று இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமானது. எனவே இந்த நிகழ்ச்சி டிஆர்பி-யில் முன்னணி வகித்தால் இதனை காப்பியடித்து சன் டிவி நடுவராக விஜய் சேதுபதியை களமிறக்கியுள்ளது.
விஜய்சேதுபதி தொகுத்து வழங்க உள்ள இந்நிகழ்ச்சிக்கு மாஸ்டர் செப் என்று பெயர் வைத்துள்ளார்கள். விஜய்சேதுபதியை தொடர்ந்து காமெடியை மையமாக வைத்து அடுத்ததாக ரோபோ ஷங்கரும் குக்கிங் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார் நிகழ்ச்சி விரைவில் அறிமுகமாக உள்ளது.
அந்த வகையில் ரோபோ சங்கர் மற்றும் குரேஷி இவர்கள் இருவரும் இணைந்து பொங்குரோம் திங்கிறோம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று கூறி உள்ளார்கள். இந்நிகழ்ச்சியை கிரேஸ் கருணாஸ் மற்றும் சமையல் கலை நிபுணர் வினோத்குமார் ஆகியோர் நடுவர்களாக பணியாற்ற உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க காமெடியாக இருக்க வேண்டும் என்பதால் காமெடியான நடிகர்களையும் அறிமுகப்படுத்த உள்ளார்கள். அந்த வகையில் அமுதவாணன், தங்கதுரை, நாஞ்சில் விஜயன், ஆகாஷ், ப்ரியா, உதயா, சில்மிஷம் சிவா,சாய், ரஞ்சித் ஆகியோர்கள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளார்கள்.