முதல் நாளில் பட்டையை கிளப்பிய துணிவு, வாரிசு படங்களின் வசூல்.! யார் கை ஓங்கி உள்ளது பாருங்க..

thunivu-varisu
thunivu-varisu

தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களாக பார்க்கப்படுவது அஜித் மற்றும் விஜய். இருவரும் ஒன்றாக இருந்தாலும் இவர்களது ரசிகர்கள் மாறி மாறி போட்டி போடுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் நீண்ட வருடங்களுக்கு முன்பு அஜித், விஜயின் படங்கள் ஒன்றாக வெளிவந்து மோதி இருக்கின்றன.

இப்படி ஒரே நேரத்தில் டாப் ஹீரோக்களின் இரண்டு படங்கள் வெளி வருவதால் வசூல் ரீதியாக படம் அடி வாங்கும் அதனை கருத்தில் கொண்டு சமீப காலமாக அஜித் விஜய்யின் படங்கள் வெவ்வேறு தினங்களில் வெளியாகி நல்ல வசூலை அள்ளி வந்தது. இப்படி இருந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு..

விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரண்டு படங்களும் பொங்கல் ஸ்பெஷல் ஆக கடந்த ஜனவரி 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது.இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் இந்த படங்களை கொண்டாடி வருகின்றன. துணிவு மற்றும் வாரிசு படங்களை ரசிகர்கள் முதற்கொண்டு சினிமா பிரபலங்கள் என பலரும் திரையரங்கை நாடி கண்டு களித்து வருகின்றனர்.

படத்தைப் பார்த்து திரும்பி வரும் பலரும் நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றன. நேற்று வெளியான இந்த இரு படங்களும் முதல் நாளில் எவ்வளவு வசூல் அள்ளியது என்பதை பார்ப்போம். இதுவரை வந்த தகவலின் படி அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில்  25 கோடி அள்ளியது. இதைத் தொடர்ந்து விஜயின் வாரிசு 22 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது போல் மற்ற இடங்களின் வசூலையும் பார்ப்போம். துணிவு : கர்நாடகா – 4.7 கோடி, கேரளா – 1.5 கோடி, ஆந்திரா/தெலுங்கானா – 2. 25 கோடி, அமெரிக்கா – 400 k$, சிங்கப்பூர் – 244 k$, Gulf – 5 cr, UK – 1 கோடி, மலேசியா – 1 மில்லியன் RM.  வாரிசு : கர்நாடகா – 5.6 கோடி, கேரளா – 4.3 கோடி, ஆந்திரா /தெலுங்கானா – ரிலீஸ் இல்லை, அமெரிக்கா – 325 K$, UK – 2 + கோடி, மலேசியா – RM 886,778.00, Gulf – 4.8 கோடி, சிங்கப்பூர் 158 k$ (லேட் ரிலீஸ்)