அப்பவே மாஸ் காட்டிய விஜய்.. “திருப்பாச்சி” படத்தின் வசூல் மட்டுமே இத்தனை கோடியா.? ஷாக்கான ரசிகர்கள்

thirupachi
thirupachi

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் கடைசியாக நடித்த வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த போழுதிலும் 300 கோடி வசூல் அள்ளி வெற்றி கண்டது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படமும் மிகப்பெரிய ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தில் விஜயுடன் கைகோர்த்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவன் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், த்ரிஷா, பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள்   நடித்து வரிகின்றனர்.

படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் மற்றும் லியோ திரைப்படம் குறித்து பல தகவல்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன. தற்போது விஜய் நடித்த படம் குறித்த தான் நாம் பார்க்க வருகிறோம்

விஜய் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் அதில் ஒன்று  திருப்பாச்சி. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்தது படத்தில் விஜயுடன் கைகோர்த்து திரிஷா, மல்லிகா, பசுபதி, நெல்லை சிவா, வையாபுரி, பாத்திமா பாபு, விஜயன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. திருப்பாச்சி படம் உலகம் முழுவதும்  சுமார் 32 கோடி வசூல் அள்ளியது தமிழகத்தில்  மட்டும் 22 கோடி அள்ளி அப்பொழுதே மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் படமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்பவே தளபதி விஜய் மாஸ் பண்ணிட்டாரு என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.