தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி ஹீரோவாக இருந்தாலும் தமிழ் சினிமா உலகில் வில்லன் கெஸ்ட் ரோல் குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில் தனது திறமையை வெளிக்காட்டி நடிப்பதால் விஜய் சேதுபதியின் சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இவருக்கு தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை மட்டுமே சுமார் 380 கோடி வசூல் செய்துள்ளது இந்த படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் விஜய் சேதுபதி.
இந்த படத்தை தொடர்ந்து சீனுராமசாமி உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து மாமனிதன் திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் ஒரு வழியாக திரையில் வெளியாகி தற்போது நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து காயத்ரி, குரு சோமசுந்தரம், ஷாஜி சென் மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தியுள்ளனர்.
மக்களுக்கு மாமனிதன் திரைப்படம் ரொம்ப பிடித்து இருந்தாலும் வசூல் ரீதியாக குறைந்துள்ளது. முதல் நாளில் ஒரு கோடி வசூல் செய்த மாமனிதர் திரைப்படம் இரண்டு நாள் முடிவில் 2.5 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடிக்கும் திரைப்படங்கள்..
நல்ல வரவேற்பை பெற்றாலும் ஹீரோவாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் சுமாரான வரவேற்பையே அண்மைகாலமாக பெறுகின்றன காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை தொடர்ந்து இந்த படமும் சுமாரான வசூல் வேட்டையை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.