மாஸ்டர் படத்தின் வசூல் 250 கோடி இல்ல.. உண்மையை சொன்ன நடிகை மாளவிகா மோகனன்.! வெளியான பரபரப்பு தகவல்.

master
master

பிற மொழி நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர் அந்த வகையில் மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் எடுத்தவுடனேயே டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி உள்ளார்.

முதலில் ரஜினியின் பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார் அதனை தொடர்ந்து இவர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மிரட்டலான வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் மாளவிகா மோகனன் சினிமாவில் இப்படி சிறந்த படங்களை ஒரு பக்கமும் இருக்க..

மறுபக்கம் இன்ஸ்டா பக்கத்தில் ஆடைகள் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டதால் ரசிகர்கள் இவரை வெகு விரைவிலேயே தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். வெகுவிரைவிலேயே சினிமாவில் பெரும் புகழையும் சம்பாதித்த மாளவிகா மோகனன் கேட்டபோதும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

அந்த வகையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமா உலகில் பயணித்துக் கொண்டிருக்கும் மாளவிகா மோகனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மாஸ்டர் திரைப்படம் குறித்து அவர் பேசியுள்ளார் அதில் கூறியது மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் எனக்கு நல்ல வரவேற்பு சினிமா உலகில் கிடைத்துள்ளது என குறிப்பிட்டார்.

malavika mohanan
malavika mohanan

மேலும் மாஸ்டர் திரைப்படம் 300 கோடி வசூல் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். திரைப்படம் நாம் இதுவரை 250 கோடி தான் வசூல் செய்தது என நினைத்துக் கொண்டிருப்போம் ஆனால் உண்மையில் மாஸ்டர் வசூல் 300 கோடியை தொட்டுவிட்டதாக தற்பொழுது மாளவிகா மோகனன் கூறியது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து உள்ளதாம்.