சென்னை ஏரியாவில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் டான் – 2 வார முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

don
don

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்றவர்களுக்கு நிகராக சமீபகாலமாக சிவகார்த்திகேயனும் மாஸ் கலந்த ஆக்ஷன் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்து டாப் நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் எதிர்பார்க்காத அளவு விமர்சனத்தை பெற்று வசூலை வாரிக் குவித்தது இந்த படம் வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன் கேரியரில் டாக்டர் திரைப்படம் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த மே 13 ஆம் தேதி அன்று அறிமுக இயக்குனரான சிபிசக்கரவர்த்தி உடன் முதல் முறையாக கைகோர்த்து நடித்த டான் திரைப்படம் உலகளவில் கோலாகலமாக வெளியாகியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சமுதிரகனி, எஸ் ஜே சூர்யா, பிரியங்க அருள் மோகன், சிவாங்கி போன்ற முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் ஆக்ஷன் காமெடி சென்டிமென்ட் போன்ற அனைத்தும் கலந்த கலவையான படமாக அமைந்துள்ளதால் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோதி வருகின்றன. அந்தவகையில் படம் வெளிவந்த இரண்டே வாரங்களில் 100 கோடி வசூலை முந்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டான் திரைப்படம் 14 நாள் முடிவில் 104 கோடி வசூலை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது அதன்படி சென்னையில் இரண்டு வார முடிவில் டான் திரைப்படம் 6.13 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது.