குக் வித் கோமாளியில் ஓவர் சீன் போடும் கோமாளி…! எல்லை மீறி போவதாக குற்றம் சாட்டும் ரசிகர்கள்..

cook-with-comali-4
cook-with-comali-4

விஜய் டிவியில் தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்காக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சிக்கு ஏகபோக வரவேற்புகள் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் கோமாளிகளை களம் இறக்கி காமெடி கலாட்டாவுடன் அனைவரையும் மகிழ்வித்து வருகின்றனர் மேலும் பல சினிமா பிரபலங்களும் இந்நிகழ்ச்சியினை பார்த்து வருகிறார்கள்.

இவ்வாறு இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருவதால் 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்பொழுது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் முந்தைய சீசன்களை போல் இந்த சீசன் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது இந்நிகழ்ச்சியில் புகழ், சிவாங்கி, பாலா, குரேஷி, மணிமேகலை போன்ற பல கோமாளிகள் உள்ளனர்.

குக் வித் கோமாளி முதல் சீசனில் இருந்து தற்போது வரையிலும் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதற்கு இவர்களும் ஒரு காரணம்.‌ இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ள நிலையில் தற்போது இவர்களுக்கு தொடர்ந்து வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரும் புகழ் ஓவர் ஆட்டி டியூட் காட்டி வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். செஃப் தாமுவை அப்பா என்றும் சிவாங்கியை தங்கை என்றும் கூறிவந்த நிலையில் தற்பொழுது அது ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கண்டன் கொடுக்க வேண்டும் என்பதற்காக சமையலில் மிகவும் ஆர்வமாக இருந்து வரும் பெண் போட்டியாளர்களை தேவையில்லாமல் புகழ் தொந்தரவு செய்து வருகிறார்.

அதோட மட்டுமல்லாமல் நடுவர்கள் சமைத்த உணவுகளை ருசித்து பதில் சொல்லும் பொழுது தேவையில்லாமல் கண்டதையும் பேசி வருவதாகவும் முதல் இரண்டு சீசன்களுக்கு பிறகு இவர் பிரபலமானதால் ஓவர் சீன் போடுகிறார் எனவும் இவருடைய நடவடிக்கை எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது இவரால்தான் குக் வித் கோமாளி சீசன் 4வது ரசிகர்களை பெரிதாக கவரப்போவதில்லை என கூறி வருகின்றனர்.