விஜயிடம் பொய் சொல்லி ஷூட்டிங் நடத்திய ஒளிப்பதிவாளர்.? உண்மையை கண்டுபிடித்து எச்சரித்த தளபதி.

vijay-

தமிழ் சினிமா உலகில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 61ஆவது திரைப்படத்தில் விருவிருப்பாக நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் 2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தைப் பற்றி ஒரு சிறப்பான தகவல் ஒன்று கிடைத்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சாஹீன் கான் ஹீரோயின்னாக நடித்தார்.

விவேக், விஜயகுமார், சிந்து மேனன், மணிவண்ணன் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து அசத்தியது. இந்த படத்தை வின்சென்ட் செல்வா இயக்கியிருந்தார். நடிகர் நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். அவர் அண்மையில் விஜய் உடன் பணியாற்றிய சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

யூத் படத்தில் ஒரு காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது கதாநாயகி வேறு ஒரு சேலையை கட்டி வந்து விட்டார். அதனால் அந்த காட்சி திரும்ப எடுக்க வேண்டிய கட்டாயம் இந்தக் காரணத்தைச் சொன்னால் விஜய் வேறு மாதிரியாக எடுத்துக் கொள்வார் என நினைத்து படத்தின் இயக்குனர் என்னை அனுப்பி விஜய் சாரிடம் வேறு ஏதாவது காரணத்தைச் சொல்ல சொன்னார்.

நான் சென்று விஜய் சாரிடம் எடுத்த ப்ரேம் அழிந்துவிட்டது. அதனால் திரும்ப ஷூட் செய்ய வேண்டும் என ஒரு பொய்யான காரணத்தை கூறினார் உடனே விஜய்யும் சம்மதித்து 6 மணிக்குள் முடித்துவிடுங்கள் அதன்பிறகு வேறு சூட்டிங் இருக்கிறது என சொல்லிவிட்டார். அதேபோல் 6 மணிக்கு விருவிருவென சூட்டிங்கை முடித்து விட்டோம் பிறகு விஜய் என்னை தனியாக கூப்பிட்டார்.

அருகில் சென்று ஏன் இப்படி செய்தீர்கள் என என்னைக் கேட்டார் உண்மையான காரணத்தை சொல்ல வேண்டி தானே என கூறினார் நான் அதிர்ச்சியில் இருந்தேன் ஆனால் விஜய் சார் காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டார் என்னுடன் நடிக்கும் நடிகை எந்த செலயயை இதற்கு முன் அணிந்திருந்தார் என்று எனக்கு தெரியாதா என கூறினார் உண்மையை சொன்னால் நான் நடிக்க மாட்டேனா ஏன் இதேபோல் செய்தீர்கள் இனி இப்படி திரும்ப செய்யவே செய்யாதீர்கள் என ஒளிப்பதிவாளர் நட்ராஜிடம் சற்று கண்டித்து பேசினாராம் விஜய்.