“நானே வருவேன்” படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் அல்லாடும் படக்குழு.? சொல்ல முடியாமல் திணறும் தனுஷ்.

dhanush-
dhanush-

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தனது திறமையை வெளிக்காட்டி வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இதுவரையில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்ஜிகே போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார்.

இப்பொழுதும் பல்வேறு திரைப்படங்களை இயக்க அவர் ஆர்வமாக இருக்கிறார். அந்த வகையில் முதலாவதாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது தம்பியும், நடிகருமான தனுசுடன் கைகோர்த்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். அதனை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க இருக்கிறார்.

இதனால் செல்வராகவன் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் செல்வராகவன் பீஸ்ட்,  சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்தும் உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது செல்வராகவன் தனுசை வைத்து நானே வருவேன் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து இந்துஜா ரவிச்சந்திரன், யோகிபாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர் இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு இயக்குகிறார்.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக முதலில் அரவிந்த் கிருஷ்ணா முதலில் நியமிக்கப்பட்டிருந்தார் திடீரென அவர் விலகியதை அடுத்து சாணிக காயிதம் படத்தில் செல்வராகவனுடன் பணியாற்றிய யாமினி என்பவரை நானே வருவேன் படக்குழு அழைத்தது. இவரும் சில காரணங்களால் தற்போது இந்த படத்தில் இருந்து விலகியதை அடுத்து படக்குழு செம அப்செட்டில் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக தனுஷ் புலம்பி வருகிறாராம் காரணம் தனுசுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இருக்கின்ற நிலையில் தற்போது ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் படத்தை எடுக்க முடியாமல் தனுஷ்க்கு நெருக்கடியை கொடுக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் செல்வராகவனும் படத்தின் டேட் தள்ளிப்போகும் என்ற கவலையில் இருக்கிறார்.