80,90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா இவர் ஹீரோயின்னாக நடிக்கவில்லை என்றாலும் குணச்சித்திர மற்றும் ஐட்டம் பாடலுக்கு நடித்து தனக்கான ஒரு ரசிகர்களை பட்டாளத்தை வைத்திருந்தார். அப்போது இவரை கமீட் செய்ய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்து கொண்டு இருந்தனர்.
இப்படி திரை உலகில் ஓடிய இவர் சினிமா ஆரம்பத்தில் இவருக்கு நடிக்கவும் வராதாம், நடனம் ஆடவும் வராதாம் படிப்படியாக கற்றுக்கொண்டு பிறகுதான் தனது திறமையை முழுவதுமாக வெளிக்காட்டினாராம் இவரது திறமையை கொண்டுவர பல இயக்குனர்களும் நடன கலைஞர்களும் போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது அப்படி ஒரு விஷயத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம்..
நடிகை சில்க் ஸ்மிதாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. சில்க் ஸ்மிதாவை வைத்து ராத்திரி அம்மா பாடலை எடுக்க நடன கலைஞரான புலியூர் சரோஜா முடிவு செய்தார் இதை பார்த்த கமல் மாட்டிக்கிட்டீங்களே எனக்கூறி கமெண்ட் அடித்தாராம்.
ஆனால் எப்படியாவது சில்க் ஸ்மிதாவை இந்த பாடலில் சூப்பராக ஆட வைத்து விட வேண்டுமென முடிவெடுத்தாராம் ஒரு சீனியில் அவர் வெட்கப்பட வேண்டும் ஆனால் அந்த சீனு அவருக்கு சுத்தமாக வரவில்லை வேறு வழி இல்லாமல் சில்க் ஸ்மிதாவின் அடியில் படுத்துக்கொண்டு அந்த காட்சி வரும் பொழுது அவரது இடுப்பை கிள்ளி விட்டாராம் பிறகு அந்த காட்சி ஓகே ஆனதாம்..
பாடலை முழுவதும் எடுத்த பிறகு பார்த்தால் பாடல் அவ்வளவு சூப்பராக இருந்ததாம் வெளிவந்து பாடல் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த பாடலின் மூலம் சில்க் ஸ்மிதாவின் வளர்ச்சியும் அதிகரித்தது அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது திறைமையை வளர்த்து கொண்டு நடனம் மற்றும் நடிப்பிலும் பின்னி பெடல் எடுக்க ஆரம்பித்துவிட்டாராம்..