வலிமை பட இயக்குனருக்கு குழந்தை பிறந்துள்ளது.! வாழ்த்துக்கள் கூறும் தல அஜித் ரசிகர்கள்.!

H.vinoth

தமிழ் சினிமா உலகில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் இயக்குனர் எச்.வினோத்.

இவர் இந்தப் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று தல அஜித்துடன் இணைந்து நேர்கொண்டபார்வை போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

மேலும் இவர் தற்பொழுது தல அஜித்தை வைத்து வலிமை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை தல அஜித்தின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் எச்.வினோத்தை பற்றி ஒரு சூப்பரான தகவல் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்று கேட்டால் இயக்குனர் எச்.வினோத் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்.

இதையடுத்து இந்த தகவலை அறிந்த தல ரசிகர்கள் பலரும் இயக்குனர் எச்.வினோத் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருவது மட்டுமல்லாமல் இந்த தகவலை இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

H.vinoth
H.vinoth