இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தான் ஒரு காலத்தில் ரசிகர்களை வாட்டி வதைத்த நடிகை.!

aishwarya-rai

பல மொழித் திரைப்படங்களில் நடித்து மக்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர்தான் உலக அழகி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐஸ்வர்யா ராய் இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் நடித்த திரைப்படங்களை ரசிகர்களால் மறக்கவே முடியாது என்றுதான் கூறவேண்டும் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து விட்டது.

மேலும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவை தவிர்த்து பார்த்தால் பல மொழித் திரைப்படங்களில் பல கோடி பட்ஜெட் திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் நடித்த பொழுது இவரது அழகை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் பல ரசிகர்கள் இவரை ரசித்து வந்தார்கள்.

இயல்பாகவே இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விட்டால் உடனே அந்த புகைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் லைக்,ஷேர் போன்றதை செய்து விடுவார்கள் மேலும் இவர் தற்பொழுது தமிழில் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் கனவு திரைப்படமாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையை தற்பொழுது தனது திறமையால் மணிரத்னம் அவர்கள் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

aishwarya rai2
aishwarya rai2

சமீப காலமாகவே பல பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அதேபோல் தற்போது நடிகை ஐஸ்வர்யாராயின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சின்னஞ்சிறு வயதில் கூட பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.