தொண்டு நிறுவனம், சினிமா இயக்குனர் என பல தொழிலை செய்து வரும் ரோபோ சங்கரின் மருமகன்.! கார்த்தி யார் தெரியுமா.?

robo-shangar

கடந்த சில தினங்களுக்கு முன்பிலிருந்தே ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் திருமண விஷயம் சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக போய்க் கொண்டிருக்கிறது. அதாவது ரோபோ சங்கரின் மகள் இந்துரஜா தனது திருமணம் குறித்த தகவலை இணையதளத்தில் கூறியிருந்த நிலையில் அது குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் வளர்ந்து பிறகு தொகுப்பாளராக பணியாற்றி தற்பொழுது வெள்ளித்திரையில் பிரபல காமெடி நடிகராக பட்டையை கிளப்பி வருபவர் தான் நடிகர் ரோபோ சங்கர். குறுகிய காலத்திலேயே பிரபலமான இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தீபாவளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற நிலையில் பிறகு 2002ஆம் ஆண்டு ரோபோ சங்கர் பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இந்திரஜா என்ற மகளும் இருக்கிறார்.

இந்துரஜா அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரோபோ சங்கரின் மகள் நடித்திருந்த நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை அடுத்து கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் மேலும் சில திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்து வரும் இந்துரஜா தனது முறை மாமனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இவர் யார்? இவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா? என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் அதற்கு இந்தரஜா ஆமாம் என தனது திருமணம் குறித்து கூறியுள்ளார்.

indhuraja
indhuraja

அதில் ரோபோ சங்கர் மகள் திருமணம் செய்து கொள்ள போகும் கார்த்திக் என்பவர்  ‘தொடர்வோம்’ என்ற தன்னார்வலார் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் நிலையில் இதன் மூலம் பல குழந்தைகளை வளர்த்து வருகிறாராம். அவருடைய பூர்வீகம் மதுரை தான் ரோபோ சங்கரும் மதுரை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று இருவரும் உறவினர்கள் என்பதால் இது நிச்சயம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எனவும் கார்த்திக்கு இயக்குனராக வேண்டும் என்பது ஆசையாம் அதனால் இருவரும் ஒருவகையில் திரைத்துறையைச் சேர்ந்தவர் தான்.

இந்திரஜாவும் தொடர்ந்து நடிப்பிலும், படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் இருவரும் சேர்ந்துக் எடுத்துக் கொண்ட  புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டிருந்தார். மேலும் தேதி முடிவு பண்ணவில்லை பண்ணும் பொழுது சொல்கிறோம் எனக் கூறியிருக்கும் நிலையில் விரைவில் ரோபோ சங்கரின் வீட்டில் திருமணம் நடைபெற இருக்கிறது.