சினிமா உலகில் எப்படிப்பட்ட கதைகளமாக இருந்தாலும் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதால் தனுஷின் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி படமாக மாறுகிறது இருப்பினும் ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை தழுவுவது வழக்கம் அந்த வகையில் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மாறன் திரைப்படம்.
தோல்வியை தழுவி இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது அடுத்த அடுத்த படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார் தனுஷ் கையில் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன், கேப்டன் மில்லர், ஹாலிவுட் படமான க்ரே மேன் திரைப்படத்திலும் நடித்து அசத்தி உள்ளார்.
தமிழ் நடிகரான தனுஷ் தற்போது உலக அளவில் பிரபலமாகி பல்வேறு மொழிகளில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மலையாளத்தில் கும்பளங்கி நைட்ஸ் படத்தில் முதலில் நடிக்க தேர்வானது நடிகர் தனுஷ் தானாம். இதற்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் எப்படியாவது தனுஷை கமிட் செய்து விட வேண்டும் என முயற்சித்து உள்ளனர்.
ஆனால் தனுஷ் தற்பொழுது நான்கைந்து படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் கும்பளங்கி நைட்ஸ் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இந்த படத்தில் அவர் நடித்திருந்தால் தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் எண்ணமாக இருந்தது ஆனால் அது நிறைவேறாமல் போனதால் கடைசி நேரத்தில் இந்த படத்தில் பகத் பாசிலையில் நடித்தார். மேலும் பேசிய நடிகர் பகத் பாசில்.
கும்பளங்கி நைட்ஸ் படத்தில் தன்னை நடிக்க வைத்ததாகவும் என்னுடைய நடிப்பை விட தனுஷ் இந்த படத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கும் எனவும் கூறினார் தற்பொழுது தனுஷ் நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தையும் நான் பார்த்து வருகிறேன் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்கிறது அதில் தனுஷ் கதாபாத்திரம் சூப்பராக இருப்பதாக கூறினார்.